மூத்த தமிழறிஞர்களுக்கு பாராட்டு விழா - 16-Sep-2015 11:09:32 AM

ரோட்டில் நடைபெற்ற ஈரோடு புத்தகத்  திருவிழாவில் தமிழகத்தின்  தலை சிறந்த மிக மூத்த தமிழறிஞர்களுக்குப்  பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஈரோடு, யூ.ஆர்.சி பழனியம்மாள் மெட்ரிக் மேல்நிடைலப்பள்ளி செயலாளர் சி.தேவராசன் தலைமை வகித்தார்.

மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் வரவேற்புரையாற்றினார்.

மூத்த தமிழறிஞர்களாகிய முனைவர் மா.நன்னன், முனைவர் ச.வே.சுப்பிரமணியன், முனைவர்  தமிழண்ணல், முனைவர்  இரா.இளங்குமரன், முனைவர்  சோ.ந.கந்தசாமி, முனைவர்  க.ப.அறவாணன்  ஆகியோருக்கு பேரூர் ஆதினம்  தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார்  பாராட்டு மடல்  வழங்கிச் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர்  கலந்து கொண்டனர். 


Go Back